||இயற்கையை பாதுகாத்து பசுமையான சூழலை உருவாக்குவது இன்றைய காலத்தின் தேவையாகும் அந்தவகையில்  ஐக்கிய இராச்சியம் கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பினால் கற்பகா திட்டத்தின் கீழ் ஒரு மில்லியன் பயன்தரும் விதைகள் தாயக நிலத்தில் என்கின்ற தொனிப்பொருளில் இடம்பெறுகின்ற மரநடுகை திட்டத்தின் மூன்றாம் கட்டமாக  முல்லைத்தீவில் 5000 பணம் விதைகளை நாட்டும் திட்டம் இன்று முல்லைத்தீவில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது||

||கிளிநொச்சி சமூக அபிவிருத்தி பேரவை மற்றும் கரைத்துறைப்பற்று பிரதேச இளைஞர் கழக சம்மேளனம் ஆகியவற்றின்  ஏற்பாட்டில்  இந்த  விதை நடுகை திட்டத்தின் மூன்றாம் கட்டம் இன்று முல்லைத்தீவில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது||

||இந்தத் திட்டத்தின் மூன்றாம் கட்டமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் 5000 பணம் விதைகள் நாட்டப்படவுள்ளது||
இதன் ஆரம்ப கட்டமாக இன்று முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு அருகே உள்ள நந்திக்கடல்  கடற்கரையோரத்தில் 250 பணம் விதைகள் நட்டு  திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது||

||தற்போதைய நாட்டின் கொரோனா தொற்று நிலைமைகளை கருத்தில் கொண்டு சுகாதார நடைமுறைகளை பேணியவாறு ஒட்டுசுட்டான் பிரதேச கால்நடை வைத்திய அதிகாரி பாலசிங்கம் ஜெகஜீவன் || தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட  அரசாங்க அதிபர் க.விமலநாதன் முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் ||,யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர்||த.சத்தியமூர்த்தி  கரைத்துறைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் வே.சிறீராம்  கரைத்துறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்கள்,||கரைத்துறைப்பற்று பிரதேச இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் தெய்வேந்திரன் திருனீபன்  புதுக்குடியிருப்பு  பிரதேச இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் சிவராசா .சிவரஞ்சன் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற முல்லைத்தீவு மாவடட உதவிப்பணிப்பாளர் திருமதி சரோஜா குகணேசதாசன்  இலங்கை செஞ்சிலுவைச் சங்க கிளை உறுப்பினர்கள்  மற்றும் கிளிநொச்சி மாவட்ட சமூக அபிவிருத்தி பேரவை உறுப்பினர்கள் ஆகியோர்  கலந்துகொண்டு விதைகளை நாட்டி திடடத்தை ஆரம்பித்து அளித்தனர்||

||முல்லைத்தீவு மாவட்டத்தில் 5 ஆயிரம் பனை விதைகள் நாட்டும் திட்டம் தொடர்ந்து மாவடடத்தின் தெரிவுசெய்யப்படட பல்வேறு இடங்களில்  இடம்பெறவுள்ளதாகவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்||.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *