நேர்த்திக்கடன் செய்ய முழுமையாக தடை 50 பேருடன் ஆலய சடங்கு வன்னிவிளாங்குளம் அம்மன் ஆலய பொங்கல் நடத்த முடிவு!
முல்லைத்தீவு மாவட்டத்தில் வன்னிவிளாங்குளம் அம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கள் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட செயளாலர் தலைமையில் 21.05.2020 அன்று நடைபெற்றுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்கும் வன்னிவிளாங்குளம் அம்மன் ஆலய பொங்கள் உற்சவம் எதிர்வரும் மாதம் 05.06.2020 வெள்ளிக்கிழமை இடம்பெற உள்ளதனால் நாட்டில் ஏற்பட்ட கொரோனாவைரசினால் பொதுமக்களை பாதுகாக்கும் நோக்கோடு இந்த ஆண்டு பொதுமக்களை மட்டுப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட செயளாலர் க.விமலநாதன் லைமையில் இடம்பெற்றுள்ளது.
வன்னிவிலாங்குளம் ஆலய மண்டபத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில்ஆலயத்தின் தலைவர் பொ.பிருந்தாபன் அவரும் மாந்தை கிழக்கு சுகாதார பணிப்பாளர் க.சுசீந்திரா ஆகியோரும் பொலிஸ் பொறுப்பதிகாரி இராணுவ பொறுப்பதிகாரி மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் பிரதேச கலாச்சார உத்தியோகத்தர் மாந்தை கிழக்கு பிரதேச செயளாலர் உதவி மாவட்ட செயளாலர் ஆலய நிர்வாக உறுப்பினர்கள் ஆகியோருக்கு இடையில் இக் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இதன்போது ஆலயத்தில் ஆலய சடங்குகள் செய்வதற்கு 50 பேர் சுகாதார நடைமுறைக்கு அமைவாக அனுமதிக்கப்பட்டதோடு நேர்த்தி கடன் செய்வது முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளதோடு பொதுமக்கள் ஆலயத்திற்கு வருவது முற்று முழுதாக தடைசெய்யப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபரும் சுகாதார பணிப்பாளரும் ஆலய தலைவரும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது