||தனது பிள்ளைகள் இருவரையும் ஏன் கழுத்தறுத்து கொன்றேன்|| என நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார் பிரித்தானியாவில் கொலைக்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள நடராஜா நித்தியகுமார்||.

||நானில்லாத காலத்தில் பிள்ளைகள் கஷ்டப்படக்கூடாது என்ற காரணத்தினாலேயே பிள்ளைகளை கொலைசெய்துவிட்டு தற்கொலை செய்துகொள்ள திட்டமிட்டேன் என அவர் தெரிவித்துள்ளார்||.

||கிழக்கு லண்டனின் இல்ஃபோர்டில் உள்ள தனது வீட்டில் ஏப்ரல் 16ஆம் திகதி மூன்று வயது நிஜிஷ் மற்றும் 19 மாத குழந்தையான பாவின்யா ஆகியோரை கழுத்தறுத்து கொன்றுவிட்டு||, நடராஜா நித்தியாகுமார் (41) தனது கழுத்தை வெட்டி தற்கொலைக்கு முயன்றிருந்தார். மனைவி நிசாவையும் வெட்ட முயன்றபோது அவர் தப்பித்தார்.||

||பின்னர் நிஷா பொலிசாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில், அந்த வீட்டிற்கு விரைந்து வந்த பொலிசார் குழந்தைகளை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். எனினும், குழந்தைகள் உயிரிழந்தனர். கடுமையான காயமடைந்திருந்த நித்தியாகுமார் சிகிச்சையின் பின் குணமடைந்துள்ளார்||.||யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கை சேர்ந்தவர் நித்தியகுமார். மனைவி நிசாவும் யாழ் மாவட்டத்தை சேர்ந்தவர்.||

||படுகாயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நடராஜா நித்தியகுமார் குணமடைந்ததை தொடர்ந்து, நேற்று முன்தினம் (6) அவர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார்||.|இதன்போது, நடராஜா நித்தியாகுமார் மீது மனிதக் கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்||.

||நித்தியகுமார் மனச்சோர்வடைந்துள்ளதாகவும், அவரது வாடிக்கையாளர்களால் “வருத்தப்பட்டதாகவும்” நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.|||அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்||.

||அவர் தற்கொலை செய்வதை பற்றி யோசித்ததாக போலீசாரிடம் கூறினார். ஆனால் தான் தற்கொலை செய்வது, தனது பிள்ளைகளின் வாழ்க்கையை அழித்துவிடும் என்று நம்பினார்.|| ||அவர்கள் வாழ்க்கை பாதுகாப்பற்றதாக மாறிவிடும் என நம்பினார் என தெரிவிக்கப்பட்டது.

||இதன்போது, நீதிமன்றத்தில் சமூகமளித்திருந்த தாயார் நிஷா கண்ணீர்விட்டு அழுதார்.

||பிள்ளைகள் பாதுகாப்பற்றவர்களாகி விடுவார்கள் என்பதால், இரண்டு பிள்ளைகளையும் கழுத்தறுத்து கொன்று விட்டு, தனது கழுத்தையும் அறுத்துள்ளார்.||

||மாலை 5.53 மணியளவில் பவின்யா இறந்துவிட்டதாகவும், நிஜிஷ் ரோயல் லண்டன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் இரவு 7.42 மணிக்கு இறந்துவிட்டார் என்றும் அறிவிக்கப்பட்டது.||

||நித்தியாகுமார் ஏப்ரல் 29 ஆம் திகதி சிகிச்சை பெற்று வந்தபோது கைது செய்யப்பட்டார்.||

||அவர் ஒரு மன கோளாறால் அவதிப்பட்டார், ஆனால் “மிகக் குறைந்த சிகிச்சை” பெறுவதாக நீதிமன்றத்தில் கூறப்பட்டது.

||அவர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி டங்கன்கன் அட்கின்சன்- மனநல நிபுணர் ஒருவரின் அறிக்கையை சமர்ப்பித்து, அவர் சம்பவம் நடந்தபோது என்ன செய்கிறார்||| என தெரியாமல் நடந்து கொண்டதாகவும், அந்தக் கோளாறுதான் அவரது குழந்தைகளைக் கொல்ல வழிவகுத்தது என்பது தெளிவாகத் தெரிந்தது என்றார்||.

||தண்டனை வழங்குவதை டிசம்பர் 5ஆம் திகதி வரை நீதிபதி திருமதி ஜஸ்டிஸ் கட்ஸ் ஒத்திவைத்தார். மேலும் மருத்துவமனை உத்தரவை பரிசீலிப்பதாக கூறினார்||.

|\கிழக்கு லண்டனில்|| உள்ள மனநல மையத்திற்கு நித்தியகுமார் திருப்பி அனுப்பப்பட்டார், அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.||

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *