புதுடெல்லி,
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
 1. ரேஷன் அட்டைகளை நாட்டில் உள்ள எந்த ரேஷன் கடைகளிலும் பயன்படுத்தலாம்.
 2. ,23 மாநிலங்களில் உள்ள 67 கோடி பயனாளர்கள் பயன்பெறுவார்கள்.
 3.  புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ரேஷன் அட்டைகளை நாடு முழுவதும் பயன்படுத்த வகை செய்யப்படும்.
 4.  மார்ச் 2021 உள்ளாக இவற்றை நடைமுறைப்படுத்தி முடிக்க காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.
 5. புலம்பெயர் தொழிலாளர்களுக்கான குறைந்த விலை குடியிருப்பு வசதி.
 6. தொழிலாளர்களுக்கு குறைந்த விலையில் வாடகை வீடு வழங்கும் திட்டம் கொண்டு வரப்படும்.
 7. *பெரிய நகரங்களில் உள்ள பயன்படாத அரசு குடியிருப்புகள் வாடகை குடியிருப்புகளாக மாற்றப்படும்.
 8. தனியார் கட்டிடங்களையும் இதன் கீழ் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.
 9.  இதுதொடர்பான விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும்.
 10. தொழில் நிறுவனங்களே தங்கள் ஊழியர்களை குடியமர்த்த குடியிருப்புகளை உருவாக்கலாம் அதற்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.
 11.  சரியாக கடனை கட்டக்கூடிய சிறு வணிகர்களுக்கு 2 சதவீத வட்டி மானியம் வழங்கப்படும்.
 12. 50,000 ரூபாய்க்கு குறைவான முத்ரா கடன்களுக்கான வட்டி 2% குறைப்பு,
 13. இதற்காக 1500 கோடி ரூபாய் வட்டி மானியமாக வழங்கப்பட உள்ளன.
 14. முத்ரா வட்டி மானியம் காரணமாக மூன்று கோடி சிறு வணிகர்கள் பயன்பெறுவார்கள்
 15. சாலையோர வியாபாரிகளுக்கான அறிவிப்புகள் வெளியிடுகிறார் நிதியமைச்சர்
 16. 50 லட்சம் சாலையோர வியாபாரிகள் இந்தியாவில் உள்ளனர் .
 17. ரூ.5000 கோடி மதிப்பில் சிறப்பு நிதி உதவி ஒருவருக்கு 10,000 ரூபாய் வரை கடன் வசதி.
 18. சாலையோர வியாபாரிகளுக்கு நடைமுறை மூலதனமாக பத்தாயிரம் ரூபாய் கடனுதவி வழங்கப்படும்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *