வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலயத்துக்கு அண்மையாக வீதியில்சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரை இலக்கு வைத்து ஒருவர் கிளைமோர் தாக்குதல் நடதப்பட்டுள்ளது. சம்பவத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
மணல் கடத்தல்காரர்களால் பொலிஸாரை இலக்குவைத்து இந்த கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டது என்று பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் இன்று புதன்கிழமை 7.30 மணியளவில் வல்லிபுர ஆழ்வார் ஆலயத்திற்கு அருகில் உள்ள முச்சந்தியில் இடம்பெற்றது.
மணல் கடத்தலைக் கட்டுப்படுத்த சம்பவம் இடம்பெற்ற இடத்தில் பொலிஸார் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுப்பது வழமையானது. அதுபோன்றே இன்றும் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சோதனை நடவடிக்கைக்கு தயாரான போது வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றது” என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.
சம்பவத்தினை தொடர்ந்து பொலீசார் படையினர் குவிக்கப்பட்டு தீவிர தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் பலர் விசாரரணக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.