யாழ்ப்பாணம் தென்மராட்சி மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் கோவில் பூசகரைத் தாக்கிய கொள்ளையர்கள் அவருடைய வீட்டிலிருந்து பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்டுச் சென்ற சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.

கோவிலுக்கு அண்மையில் தனித்துவாழும் பூசகரே தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். இன்று அதிகாலை 03 மணியளவில் பூசகரின் வீட்டினுள் நுழைந்த இருவர் அவரை கொட்டன் தடிகளால் சரமாரியாகத் தாக்கி, அவர் அணிந்திருந்த நகைள், வீட்டில் இருந்த நகைகள் மற்றும் பணம் என்பன உள்ளடங்கலாக ஏழு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா பெறுமதியான பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *