சென்னை,
சென்னை மெரினா கடற் கரையில் நேற்றுமுன்தினம் ஆண் ஒருவரின் உடல் கரை ஒதுங்கி கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில், மெரினா போலீசார் அந்த உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில் அந்த நபர் சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த மல்லிகா அர்ஜூன் (வயது 35) என்பது தெரியவந்தது. பயிற்சி டாக்டரான இவர் குரோம்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் வேலை செய்து வந்தார்.
இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. கடந்த சில நாட்களாக அவரது குடும்பத்தில் சில பிரச்சினைகள் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார்.
இந்தநிலையில் நேற்றுமுன்தினம் மாலை தனது காரில் மெரினா கடற்கரைக்கு வந்த அர்ஜூன், காரை கலங்கரை விளக்கம் அருகே நிறுத்தி விட்டு கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு, ‘எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை. அப்பா, அம்மாவை பத்திரமாக பார்த்துக் கொள்ளவும்’, என கார் இருக்கும் இடத்தின் ‘லொக்கேஷனுடன்’ அவர் தனது சகோதரரின் வாட்ஸ்-அப் எண்ணுக்கு தகவல் அனுப்பி உள்ளார் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *