முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்விற்கு இலங்கையின் படைத்தரப்பு குறித்த நேரத்தில் அங்கு சமூகமளிக்க முடியாதவாறு சோதனைசாவடிகளை ஏற்படுத்தி தடைகளை ஏற்படுத்தி இருந்தது என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
படையினரின் சோதனை சாவடிகளுக்கு மத்தியிலும் மன்னாரில் இருந்து முள்ளிவாய்க்கால் சென்று உயிரிழந்த மக்களுக்கு வணக்கம் செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்
தமிழ்மக்களின் இனத்திற்காக போராடிய போராட்டம் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் மௌனிக்கப்பட்டது அந்த போரில் மண்ணுக்காக இறந்த போராளிகள் பொதுமக்களை நினைவுகூரும் இடமாக ஆண்டு தோறும் முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் மக்கள் வந்து அஞ்சலி செலுத்துவார்கள்.
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அதிகளவான மக்கள் கூடமுடியாத நிலை இருந்த போதும் மக்கள் வணக்கம் செலுத்தியுள்ளார்கள்.
இருந்தும் இலங்கையின் படைத்தரப்பு குறித்த நேரத்தில் இங்கு சமூகமளிக்கமுடியாதவாறு சோதனைசாவடிகளை ஏற்படுத்தி தடைகளை ஏற்படுத்தி இருந்தது சோதனை சாவடிகளை மீறி சிலவீதிகளால் வந்து உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தக்கூடியவாறு அமைந்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.