முல்லைத்தீவு மாவட்டத்தில் காணிப்பிரச்சனைகள் தொடர்பிலான தகவல் திரட்டும் நடவடிக்கையில்-பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் ஈடுபட்டுள்ளார்.
நேற்று (03) முல்லைத்தீவிற்கு பயணம்—மேற்கொண்ட அவர் கொக்குத்தொடுவாய் கமக்கார அமைப்பினரை சந்தித்து கலந்துரையாடி ஆவணங்களை பெற்றுக்கொண்டுள்ளார்.
 
இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்–
 
தமிழ்மக்களுக்கு சொந்தமான காணிகளை மகாவலி அபிவிருத்தி—அதிகாரசபை,–வனவளத்திணைக்களம்–, விவசாயம் செய்வதற்கு தடை விதித்து வந்துள்ளார்கள்.– மகாவலி கையகப்படுத்தும் நடவடிக்கையினை நிறுத்துமாறு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார் அதனால் சிறு காலஅவகாசம் கிடைத்துள்ளது.—
பாரிய பிரச்சனை தங்கள் சொந்த காணிகளில் விவசாயம் செய்யமுடியாமல் இருக்கின்ற பிரச்சனை— சம்மந்தாமாக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம் நிறைய —ஆவணங்கள் தயார் செய்யவேண்டிய காரணத்தினால் —சிறிய தாமதங்கள் இருக்கின்றன வெகு விரைவில் அதற்கான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.—

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *