முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு ஏ 35 முதன்மை வீதியில் மந்துவில் பகுதியில் வீதி ஓரத்தில் நின்ற பாலைமரம் முறிந்து நீழ்ந்ததினால் வீதியூடாக போக்குவரத்து செய்வதில் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளார்கள்;.

இன்று காலை தொடர்க்கம் முல்லைத்தீவு மாவட்டத்தில் கடும் காற்று வீசிவருகின்றது இதனால் பெரிதான பாதிப்புக்கள் எவையும் மாலைவரை பதிவாகாக நிலையில் புதுக்குடியிருப்பு முல்லைத்தீவு வீதியில் 40 ஆவது மைல் கல்லிற்கு அருகில் வீதியில் நின்ற பாலை மரம் ஒன்று முறிந்து வீதிக்கு குறுக்கே வீழ்ந்துள்ளது

இதனால் வீதியூடாக போக்குவரத்து செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து மக்கள் முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கு தெரிவித்துள்ளதை தொடர்ந்து புதுக்குடியிருப்பு பிரதேச சபையினர் அவர்களின் ஊளியர்களை கொண்டு குறித்த மரத்தினை அறுத்து அப்புறப்படுத்தியுள்ளதுடன் வீதியினை சீர்செய்துள்ளார்கள்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *