முல்லைத்தீவு மாவட்டத்தில் வீசிய கடும் காற்று விவசாய செய்கை அழிவு நான்கு வீகள் சேதம்! வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள அம்பன் புயலின் தாக்கத்தினால் முல்லைத்தீவு மாவட்டத்தில் கடற் கொந்தளிப்பு மற்றும் காற்றின் வேகம் என்பன அதிகரித்துள்ளன. கடல் அலை 15 அடிவரை உயர்வடைந்து காணப்படுவதால் தாழ்வான கரையோர பிரதேசங்களில் கடல்நீர் கரைஏறியுள்ளதாகவும் குறிப்பாக நாயாறு,கள்ளப்பாடு,தீர்த்தக்கரை,போன்ற பகுதிகளில் புறவெள்ளம் போட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளார்கள். இதன் காரணமாக தங்கள் படகுகள் தொழில் உபகரணங்கள் அனைத்தும் கரையில் இருந்து ஏற்றிவிட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளார்கள் கடற் கொந்தளிப்பு காரணமாக முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர்கள் கடந்த 4 நாட்களாக தொழிலுக்கு செல்லாத நிலை காணப்படுகின்றது. இன்னிலையில் நேற்று (18) அதிகாலை வீசிய கடும் காற்று காரணமாக பல விவசாயிகளின் வாளைச்செய்கை அழிவடைந்துள்ளன. விசுவமடு பிரதேசத்தில் வீசிய கடும் காற்று காரணமாக பல விவசாயிகளின் ஆயிரத்திற்கு மேற்பட்ட வாளைகள் சரிந்து வீழ்ந்து அழிவடைந்துள்ளது பத்திற்கு மேற்பட்ட விவசாயிகளின் வாளைத்தோட்டங்கள் இவ்வாறு அழிவடைந்துள்ளன. விசுவமடு அதிசய விநாயகர் வீதியில் மரம் முறிந்து வீழ்ந்துள்ளதுடன் மூன்று தென்னைமரங்கள் வீதியின் மின் இணைப்பு வயர்கள் மீது முறிந்து வீழ்ந்துள்ளன. இன்னிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று,புதுக்குடியிருப்பு,ஒட்டுசுட்டான் பகுதிகளில் வீசிய கடும் காற்று காரணமாக நான்கு வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளார். குறித்த வீடுகளின் சேதங்கள் தொடர்பான மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கான முதற்கட்ட உதவிகள் வழங்கும் நடவடிக்கை அனர்த்த மாவட்ட அனர்த்த முகாமைத்து நிலையத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வருவதாக முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர் எஸ்.லிங்கேஸ்வரகுமார் தெரிவித்துள்ளார்.

Byadmin

Nov 2, 2020
போரில் உயிரிழந்த மக்களை  நினைவுகொள்கின்ற நாளை தடுப்பது சர்வதேச சட்டங்களுக்கும் ஜெனீவா தீர்மானங்களுக்கும் மாறாக அரசாங்கம் செயற்படுகின்றது என்பது தெளிவாக விளங்குகின்றது என்று முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.
18.05.2020 அன்ற முள்ளிவாய்க்கால் போரில் உயிரிழந்த மக்களிளை நினைவிற்கொள்ளும் நினைவேந்தல் நிகழ்வு முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் நடைபெற்றுள்ளது இந்த நிகழ்விற்கு வருகை தந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்
மேலும் அவர் தெரிவிக்கையில்
முள்ளிவாய்க்கால் 11 ஆம் ஆண்டு நினைவு நாளில் இறந்த தமிழ் மக்களை நினைவிற்கொள்வதற்காக காலை 7.00 மணிக்கு புறப்பட்டு வருகின்ற பாதை எங்கும் தடைமுகாம்கள் புதிய படை காவலரங்கள் ஊடாக எங்கள் பயணத்தினை தடுத்துள்ளார்கள்.
கிளிநொச்சியில் இருந்து புறப்பட்ட நாங்கள் தருமபுரத்தில் தடுக்கப்பட்ட போது உள்ளுர் வீதிகளுக்கூடாக மதியம் 12.00 மணியே முள்ளிவாய்க்கால் மண்ணிற்கு சென்றுள்ளோம்.
கடந்த 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஜெனீவாவில் கொண்டுவரப்பட்ட 40 (1) தீர்மானம் இறந்தவர்களை நினைவுகூர அனுமதிக்கப்படவேண்டும் என்ற சர்வதேச சட்ட விதிமுறைகளை மீறி இலங்கை அரசு இன்று கொரோனா என்கின்ற நோயினை காரணம் காட்டி அவர்களின் உள்நோக்கம் முழுவதும் வணக்க நிகழ்வுகளை தடைசெய்வதாகவே இருந்தது.
கொழும்பில் வெற்றிவிழா கொண்டாடுவதற்கு கொரோனா தடையில்லை ஆனால் இந்த இடத்தில் அறிவிக்கப்பட்ட சட்ட விதிகளுக்கு அமைய மக்கள் தங்கள் உறவுகளை நினைப்பதற்கு ஒரு பாரிய தடையினை இலங்கை அரசு விதித்துள்ளது.
படையினர் போர்க்குணங்களுடன் படையினர் வீதிகளில் வெறித்தனமாக முகங்களுடன் ஒவ்வொருவரையும் தாக்குகின்ற முகங்களுடன் நிற்பதை நான் பார்த்தேன்.
இந்த நாடு அதளபாதாளத்திற்கு இட்டு செல்கின்றது என்பது இப்ப அல்ல முதலே தெரிந்த விடையம் ஆனாலும் வணக்க நிகழ்வுகளுக்கு அனுமதித்திருக்கவேண்டும்
சட்டவிதிகளுக்கு அமையவே சமூக இடைவெளியில் சென்று தங்கள் உறவுகளுக்காக கண்ணீர் செலுத்துகின்றார்கள்
நினைவுகொள்கின்றார்கள் ஆண்டிற்கு ஒருமுறை இழந்துபோன ஒரு இலட்சத்தி நாற்பதாயிரத்திற்கு மேற்பட்டவர்களுக்காக நினைவுகொள்கின்ற நாளை தடுப்பது சர்வதேச சட்டங்களுக்கும் ஜெனீவா தீர்மானங்களுக்கும் மாறாக அரசாங்கம் செயற்படுகின்றது என்பது தெளிவாக விளங்குகின்றது.
அரசு தன்னுடைய போர்க்குணங்களை மாற்றி இந்த கொரோனா காலத்தில் கூட தமிழர்களின் ஒரு இனமாக இந்த நாட்டின் பிரஜைகளாக கருதுகின்ற எண்ணமில்லாமல் நடந்துகொள்வதை முள்ளிவாய்க்கால் மண்ணில் காணக்கூடியதாக இருக்கின்றது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *