முல்லைத்தீவு நகர் பகுதியில் சுகாதார விதிமுறைகளை மீறி பன்றி வளர்ப்பு-கண்டுகொள்ளாத பொதுச்சுகாதார பரிசோதகர்கள் மக்கள் முறைப்பாடு!

முல்லைத்தீவு நகரினை அழகுபடுத்தவேண்டும் என பல வேதை;திட்டங்கள் அரசாங்கம் முன்னெடுத்தாலும் ஒரு சில செயற்பாடுகள் //காரணமாக நகரப்பகுதி மாசுபட்டுக்கொண்டு செல்வதாக வண்ணாங்குளம் மக்கள் கவலை தெரிவித்துள்ளார்கள்//.

வண்ணாங்குளம் பகுதியில் கடற்கரையினை// அண்மித்த பகுதியில் பாரிய பன்றிவளர்ப்பு பண்ணை ஒன்று காணப்படுவதால் அருகில் உள்ள வீடுகளில் மக்கள் வாழமுடியாத நிலை காணப்படுவதாக தெரிவித்துள்ளார்கள்.

துர்நாற்றம் தொடர்ச்சியாக வீசிவருகின்ற நிலையில ;பிரதேச சபையின் அனுமதி இன்றி பொதுச்சுகாதர பரிசோதகர்கள் மற்றும் சுற்றுச்சூழல் அதிகார சபை உள்ளிட்ட அனைவருக்கும் அறிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை// என கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளார்கள்.

பிரதேச சபை உள்ளிட்ட திணைக்களங்கள் கடற்கரையினை அழகு படுத்துவது கடற்கரை பகுதியினை சுத்தமாக /வைத்திருக்க வேண்டும் /என அறிவித்து வந்தாலும் கடற்கரை பகுதியிலேயே குறித்த பன்றி வளர்ப்பு திட்டம் மேற்கொள்ளப்படுகின்றது//

இதனால் வண்ணாங்குளம் ஆற்றுப்பகுதியில்/ இருந்து துர்நாற்றம் வீசுகின்றது சம்மந்தப்பட்ட அதிகாரிகள் குறிப்பாக பிரதேச சபை இதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.//

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *