முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த (24) (25) ஆம் திகதிகளில் வீசிய கடும் காற்று மழையினால் புதுக்குடியிருப்பு ,ஒட்டுசுட்டான்,கரைதுறைப்பற்று பகுதிகுதிகளில் மரங்கள் முறிந்துள்ளதுடன் வீடுகள்,ஆலயம், என்பன சேதமடைந்துள்ளன.
புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் வீசிய கடும் காற்று காரணமாக 14 வீடுகள் சேதமடைந்துள்ளன.
கடந்த 24 ஆம் திகதி இரவு முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட ஆனந்தபுரம் கிராமத்தில் வீசிய கடும் காற்று காரணமாக சிறிய ஆலயம் உள்ளிட்ட 14 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் 18 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ தகவல்கள் தெரிவிக்கின்றன
ஆனந்தபுரம் பகுதியில் பத்து நிமிடம் வீசிய கடும் காற்று காரணமாக 14 வீடுகள் சேதமடைந்துள்ளன இதில ஒரு குடும்பத்தின் தற்காலிக வீடு முழுமையாக சேதடைந்துள்ளது
வீட்டின் கூரை தூக்கி வீசப்பட்டுள்ள வீட்டுத்திட்டம் கிடைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளமையினால் இதுவரை தற்காலிக கொட்டிலில் நான்கு பிள்ளைகளுடன் தங்கி வாழ்ந்த குடும்பத்தின் வீட்டின் கூரை தூக்கி வீசப்பட்டு சுவர் உடைந்து வீழ்ந்துள்ளதுடன் வீட்டில் இருந்து பொருட்கள் சேதமடைந்துள்ளதாக பாதிக்கப்பட்ட குடும்பஸ்தர் தெரிவித்துள்ளார்.
ஆனந்தபுரம் பகுதியில் மக்களின் வீடுகள்,நெற்களஞ்சியம்,சிறிய ஆலயம் கால்நடைகளின் கொட்டில்கள்  என்பன கடும் காற்றினால் சேதமடைந்துள்ளன. ஆனந்தபுரம் உள்வீதியில் பனைமரம் ஒன்று முறிந்து மின்சார கம்பியின் மேல் வீழ்ந்துள்ளன.
கிராமத்தில் உள்ள ஆலயத்தின் மேற்கூரைகள் காற்றினால் 15 மீற்றர் தூரத்திற்கு அப்பால் தூக்கிவீசப்பட்டுள்ளன
பத்து நிமிடம் வரை வீசிய கடும் காற்று காரணமாக 14 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் 18 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இவர்களின் விபரங்கள் கிராம சேவாகர் ஊடாக பதிவுசெய்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான முதற்கட்ட உதவி வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.
கரைதுறைப்பற்று பிரதேசத்திற்கு உட்பட்டகருநாட்டுக்கேணியில் வீசிய கடும் காற்றினால் நான்கு வீடுகள் சேதமடைந்துள்ளன நான்கு வீடுகளில் முன்பக்க கூரைகள் தூக்கிவீசப்பட்டுள்ளதுடன் இரண்டு வீடுகளில் மலசலகூட மேற்கூரையும் தூக்கிவீசப்பட்டுள்ளன.
இதில் அங்கவீனர் ஒருவரின் வீடும் ,பெண்தலைமைத்துவ குடும்பம் ஒன்றின் வீடும் சேதடைந்துள்ளதாக கரைதுறைப்பற்று பிரதேச சபையின் கொக்குத்தொடுவாய் பிரதேச உறுப்பினர் க.சிவலிங்கம் அவர்கள் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பான விபரங்களை திரட்டிவருவதாகவும் ஞாயிற்று கிழமை என்ற காரணத்தினால் அரச உத்தியோகத்தர்கள் எவரும் வருகை தரவில்லை என்றும் கிராம சேவகரிடம் விபரங்களை சமர்;ப்பிக்க நடடிக்கை எடுத்துள்ளதாகவும் பிரதேச சபை உறுப்பினர் க.சிவலிங்கம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் வீசிய கடும் காற்று மழையினால் 15 வீடுகள் சேதமடைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்து நிலையத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 24.05.2020 மாலை 3.00 மணியளவில் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்சுட்டான் பிரதேசத்தில்  கடும் காற்றுடன் மழை பெய்துள்ளது.
இதன்போது முத்தையன்கட்டு கிராமத்தில் இரண்டு வீடுகள் சேதமடைந்துள்ளதுடன்,ஒட்டுசுட்டான் கிராமத்தில் ஒருவீடும் வித்தியாபுரம் கிராமத்தில் பத்து வீடுகளும்,சம்மளங்குளம் கிராமத்தில் இரண்டு வீடுகளும் சேதமடைந்துள்ளன.
பாதிக்கப்பட்ட குடும்பங்களின் விபரங்கள் கிராமசேவகர் ஊடாக சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதற்கட்ட உதவிகளை வழங்கும் நடவடிக்கை முன்னெடுத்துள்ளதாகவும் முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்து நிலையத்தினர் தெரிவித்துள்ளார்கள்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *