முகம்மாலையில் மீட்கப்பட்டது சோதிய படையி போராளியின் வித்துடல்! மார்போடு இறுகக் கட்டியணைத்த துப்பாக்கியும், வரிப் புலிச் சீருடையும், பொக்கட்டிற்குள் தேசியத் தலைவன் வே.பிரபாகரனின் ஒளிப் படத்தையும் (போட்டோ) பொக்கிசமாய் வைத்திருந்தவாறே வீர மறத்தி தன்னுயிர் ஈந்திருக்கிறாள் வித்தாகிப் போன வித்துடலில் இருந்த, விடுதலைப் புலிகளின் தனித்துவத்திலே ஒன்றான சோதிய படையணி, படையணியில் எத்தனையாவது உறுப்பினர், என்ற குறியீட்டு இலக்கம், குறுதி வகை பொறிக்கப்பட்டது. இலக்கம் 0164 என்னும் போது குறித்த பெண் போராளி இப் படையணியின் மூத்த போராளி என்பது உறுதியாகிறது. முகமாலையில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் இன்று அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. நேற்று கிளிநொச்சி நீதவான் வு.சரவணராஜா முன்னிலையில் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. மனித எச்சங்கள் சீருடை துப்பாக்கிகள் வெடிபொருட்கள் என்பன குறித்த இடத்தில் மீட்கப்பட்டதாக பொலிஸார் கூறினர். மீட்கப்பட்ட தடயப் பொருட்களில் வெடிபொருட்கள் தவிர்ந்த ஏனையவற்றை நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். வெடிபொருட்களை செயலிழக்கச் செய்து பொலிஸ் பாதுகாப்பில் வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதேவேளைஇஇந்த பகுதியில் எதிர்வரும் ஜூன் மாதம் 02 ஆம் திகதி மீண்டும் அகழ்வுப் பணிகளை ஆரம்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Byadmin

Nov 2, 2020

கிளிநொச்சி மாவட்டத்தில்  (21)  காலை முதல் வீசி வந்த பலத்த காற்றினால் பூநகரி, குடமுருட்டி பகுதியிலுள்ள மின் கம்பங்கள் முறிந்து வீழ்ந்ததன் காரணமாக பூநகரிப் பிரதேசத்திற்குட்பட்ட பல கிராமங்களுக்கு மின்சாரம் தடைப்பட்டுள்ளது.

 

இதில் 06 மின்கம்பங்கள் முற்றாக சேதமடைந்துள்ளன.

அத்தோடு, கிளிநொச்சி இரத்தினபுரம் சித்தி விநாயகர் ஆலயத்திற்கு முன்பாக காணப்பட்ட பாரிய பாலை மரமொன்று முறிந்து வீழ்ந்ததை தொடர்ந்து,  இரண்டு மின் கம்பங்கள் சேதமடைந்தமையால் வட்டக்கச்சி, இராமநாதபுரம் பகுதிகளுக்கான மின்சாரம் முற்றாக தடைப்பட்டுள்ளது இதேவேளை,  குறித்த பகுதியில் போக்குவரத்தும் தடைப்பட்டமையால்,  பிரதேச மக்கள் ஒன்றிணைந்து வீழ்ந்த மரத்தை அகற்றியுள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *