மாவட்டங்களுக்கு இடையில் போக்குவரத்து தடை நடைமுறையில் உள்ள நிலையில் மாவட்டம் விட்டு மாவட்டங்களுக்கு அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லும் /வாகனங்களுக்கு ஊரடங்கு அனுமதிப்பத்திரம் தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.//

மரக்கறி, /பழங்கள் உட்பட அத்தியாவசிய பொருட்களுடன் மாவட்டங்களுக்கு இடையில் பயணிக்கும் பாரவூர்திகளுக்கு ஊரடங்கு அனுமதிப் பத்திரம் அவசியமில்லை என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.//

ஜனாதிபதி காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற கொவிட்-19/ தடுப்பு செயலணியின் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.///

அத்துடன், பொருளாதார மையங்களை, மொத்த விற்பனைக்காக மாத்திரம் மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.//

இதேநேரம், ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டதன் பின்னர்,// சுய தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் உரிய முறையில் இடம்பெறுகின்றனவா என்பதனை கடுமையாக கண்காணிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.//

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *