மாணிக்கபுரத்தில் காட்டு யானைகளின் தொல்லை மக்கள் வெளியேறும் நிலை!
முல்லைத்தீவு மாவட்டம் விசுவமடு பிரதேசம் மாணிக்கபுரம் கிராமத்தில் நாள்தோறும் காட்டு யானைகளின் தொல்லையினால் மக்கள் வாழ்இடத்தினை விட்டு வெளியேற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் கவலை தெரிவித்துள்ளார்கள்
மாணிக்கபுரம் கிராமத்தின் காட்டுக்கரையினை அண்டி வாழ்ந்துவரும் மக்களின் பயன்தரு விவசாய பயிர்களை காட்டு யானை நாள்தோறும் நாசம் செய்துவருவதால் மக்கள் வாழ் இடத்தினை விட்டு வேளியேறவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளார்கள்.
கடந்த இரண்டு நாட்களாக தொடர்ச்சியாக மக்களின் காணிகளுக்குள் வரும்யானை மரவள்ளி,வாளைசெய்கைகளை அழித்துள்ளதுடன் தென்னைமரம் ஒன்றினையும் சாய்த்துள்ளது.
தற்காலிக வீடுகளில் வாழ்ந்து வரும் இந்த மக்களின் காணிகளில் நின்ற இருபத்தைந்திற்கு மேற்பட்ட பயன்தரு தென்னை மரங்கள் கடந்த காலங்களில் தொடர்ச்சியாக யானைகளால் அழிக்கப்பட்டு வந்த நிலையில் இறுதியா காணியின் முற்றத்தில் நின்ற ஒரு தென்னை மரத்தினையும் யானை அழித்துள்ளது பல மரங்களில் உள்ள பலாக்காய்களை யானை பிடுங்கி சேதப்படுத்தியுள்ளதுடன் மரத்தினையும் தாக்கியுள்ள.
மாணிக்கபுரம் பகுதியில் வீட்டுத்தோட்டத்தினை செய்துவரும் மக்களே வாழ்ந்து வருகின்றார்கள் இவர்கள் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று காரணமாக நாளாந்த வருமானம் இல்லாத நிலையில் தவித்துவருகின்றார்கள் இதனால் வீட்டுத்தோட்டமாக செய்கை பண்ணிய மரவள்ளி,வாழை போன்றவற்றினை யானை அழித்துள்ளதாக கவலை தெரிவித்துள்ளார்கள்.
தொடர்ச்சியாக ஆண்டு தோறும் யானையினால் அழிவினை சந்தித்து வருவதாகவும் இதனல் வாழ்இடத்தினை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் கவலை தெரிவித்துள்ளார்கள்.
யானைவேலி அமைத்து தருவதாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக சொல்லி வருகின்றார்கள் ஆனால் யானை வேலி அமைத்துக்கொடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்த மக்கள் அரசாங்கம் மாறி மாறி ஆட்சிக்கு வருவதால் பாதிக்கப்படுவது மக்கள்தான் என்றும் தெரிவித்துள்ளார்கள்