முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் மாங்குளம் வீதியில் காட்டுயானை தாக்கி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் வீதியில் வித்தியாபுரம் ஒட்டுசுட்டான் கிராமத்தினை சேர்ந்த 60 அகவையுடைய நாகலிங்கம் முத்துலிங்கம் என்பவர் மிதிவண்டியில் கிளிநொச்சி நோக்கி சென்று கொண்டிருந்த வேளை ஒட்டுசுட்டான் மாங்குளம் வீதியில் 14 ஆம் கட்டை பகுதியில் மாலை 7.00 மணியளவில் காட்டுயானை ஒன்று தாக்கியுள்ளது
இதன்போது படுகாயமடைந்து கால் ஒன்று முறிந்த நிலையில் மக்களால் மீட்கப்பட்டு மாங்குளம் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவர் பயணித்த மிதிவண்டியும் காட்டுயானையினால் சேதப்படுத்தப்பட்டுள்ளது
மாங்குளம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன