மாங்குளத்தில் தூக்கிவீசப்பட்ட வீடு!
முல்லைத்தீவு மாவட்டத்தில் வீசிய கடும் காற்று காரணமாக மாங்குளம் பகுதியில் வீடு ஒன்றின் கூரை தூக்கி வீசப்பட்டுள்ளது.
வடக்கில் தமிழர் தாயக பகுதிகளில் கடும் காற்று வீசிவருகின்றது இன்னிலையில் பல விவசாய செய்கைகள் மக்களின் வீடுகள் சேதமடைந்து வருகின்றன.
முல்லைத்தீவ மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்கு உட்பட்ட மாங்குளம் பகுதியில் வீட்டு ஒன்றின் கூரை முற்றுமுழுதாக தூக்கி வீசப்பட்டுள்ளன அந்த வீட்டில் இருந்தவர்களுக்கு எதுவித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.