அமெரிக்க ஜனாதிபதித் தோ்தலில்// ஜோ பிடன் வெற்றிபெறுவார் என்ற நம்பிக்கை அதிகரித்துள்ள நிலையில் இன்று வெள்ளிக்கிழமை முதல் //அவரது பாதுகாப்பு நடவடிக்கைகளில் இரகசிய சேவையினர் ஈடுபடவுள்ளதாக வொஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.

இன்று வெள்ளிக்கிழமை டெலவெயர் மாகாணத்தில் பிடன் முக்கிய உரையொன்றை நிகழ்த்தவுள்ளதாக அவரது பிரச்சாரக் குழுவினர்// அறிவித்துள்ள நிலையில் இதன்போது கூடுதல் இரகசிய சேவை முகவர்களை அவரது பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் வொஷிங்டன் போஸ்ட் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.//

இதேவேளை, பிடனின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளமை குறித்து கருத்துத் தெரிவிக்க இரகசிய சேவை /செய்தித் தொடர்பாளர் //கத்தரின் மில்ஹோன் மறுத்துவிட்டார்//. முக்கிய நபர்களுக்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இரகசிய சேவை அமைப்பு கருத்து வெளியிடுவதில்லை என்று அவர் கூறியதாகவும் /வொஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது//.

அமெரிக்காவில் /முக்கிய நபர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை முன்னெடுப்பதில் இரகசிய சேவையினரின் பணி முக்கியமானது. முக்கிய நபர்கள் செல்லுமிடங்கள்/, ஒன்று கூடும் இடங்களில் அவா்களின் /பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கைகளில் இரகசிய சேவையினர் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *