பாக்கு தெண்டலுடன்ஆரம்பமான காட்டுவிநாயகர் ஆலய பொங்கல்-ஏழு நாட்கள் விழக்கெரியும் அற்புத கட்சியுடன்!
முல்லைத்தீவு மாவட்டத்தின் புகழ் பூத்த வரலாற்று தொன்மை மிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வைகாசி விசாக பொங்கல் நிகழ்வு எதிர்வரும் 08.06.2020 அன்று நடைபெறவுள்ளது
அதன் முதன் நிகழ்வின் தொடக்கம் முள்ளியவளை காட்டுவிநாயகர் ஆலத்தின் பொங்கல் நிகழ்வுதான்.
காட்டு விநாயகர் ஆலயத்தில் ஏழு நாட்கள் உப்பு நீரில் விளக்கெரியும் மகிமையும்,மடைபூசை வழிபாடுகளும் சிறப்பாக நடைபெற்று வருவது அங்குள்ள மக்களின் பாராம்பரிய மரபுவழியாக காணப்படுகின்றது.
கண்ணகியின் வரலாற்றினை கூறும் கதைகள் பல இருந்தாலும்,வட்டக்களரியில் விடிய விடிய ஆடும் கூத்தும் கண்ணகியின் வரலாற்றினை எடுத்து சொல்லும்.
தமிழர்களின் பாராம்பரியங்களில் ஒன்றான கலையினை நம்பி வாழும் குடும்பங்கள் நாட்டின் சூழ்நிலையால் இன்று பொருளாதார நெருக்கடிக்குள்ளான நிலையில் காணப்படுகின்றார்கள்.

கோவலன் கண்ணகை வரலாற்றின் வட்டக்களரி கூத்து கண்ணெதிரே கொண்டுவரும் முள்ளிவளை கலைஞர்களின் நடிப்பு திறன் அது அவர்களின் ஒரு நேர்த்தியாகவே காலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

 

இதுவும் இந்த முறை கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மக்களை கூட்ட முடியாத நிலையில் அண்ணாவிமார்கள் சிலம்புகூறல் காவியத்தினை ஆலயத்தில் படித்து பொங்கல் ஒன்றினை வைக்கவுள்ளதாக ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது.
கலைஞர்கள் நலிவுற்ற கலைஞர்களாக இன்றும் வாழ்ந்து வரும் கலைஞர்கள் முள்ளியவளை பகுதியில் அதிகளவில் காணப்படுகின்றார்கள்.
காட்டு விநாயகர் ஆலய பொங்கல் நிகழ்வின் முதன் நிகழ்வாக மே மாதம் 25 ஆம் திகதி திங்கட் கிழமை அதிகாலை வேளை 9 வீடுகளில் நோன்கு குத்தி நிற்பவர்களால் பாக்குகள்,வெற்றிலை,மஞ்சல் சேகரிக்கப்பட்டு காட்டு விநாயகர் ஆயத்திற்கு கொண்டுவரப்பட்டு அங்குள்ள வேப்பமரத்தில் கட்டி அம்மனுக்கு பூசை வழிபாடுகள் மேற்கொள்வார்கள் இது பொங்லுக்கு அறிவிக்கும் முகமாக காலம் காலமாக நடைபெறும் நிகழ்வு  அடுத்த திங்கட் கிழமை 7 ஆம் நாள் (யூன்-1 ஆம் திகதி)தீர்தம் எடுத்தல் நடைபெறும்
இந்த பொங்கல் நிகழ்வுக்காக நோன்புகுத்தி நிற்பவர்கள் காட்டுவிநாயகர் ஆலத்தில் வந்து தங்கிவிடுவார்கள் அவர்கள்தான் தீர்த்தம் எடுக்க செல்வார்கள்
முள்ளிவளை காட்டு விநாயகர் ஆலயத்தில் இருந்து தீர்த்தம் எடுப்பதற்காக நோன்பு குத்தி நிற்பவர்கள்  பறை அடித்து வாயில் துணிகட்டி தீர்த்தக்குடத்துடன் முல்லைத்தீவு சிலாவத்தை தீர்த்தக்கரையில் தீர்த்தம் எடுக்க செல்வார்கள் பறை ஒலி கேட்க கேட்ட கடல் அலை சீற்றம் கொள்ளும் இதன்போது அலையில் மூழ்கி தீர்த்தம் எடுப்பார்கள்
எடுத்த தீர்;த்தப்பானை கடற்கரையில் படைத்து வழிபாட்டுடன் பறை அடிக்க திரண்டுவரும் அலைநடுவில் மூழ்கி எழும்பும் போது தீர்த்தப்பானை நிரம்பும் அதனை கொண்டுவந்து படைத்து பூசைகள் செய்து பின்னர் சிலாவத்தை வழியாக பக்த்தர்களின் சிததுதேங்காய் அடித்து தீர்த்தம் முள்ளிவயவளை காட்டுவிநாயகர் ஆலயத்தினை வந்தடையும் அங்கு அம்மனுக்கு சிறப்பு பூசைகள் வழிபாடுகள் தொடர்ந்து நடைபெறம்.

எடுத்துவரப்பட்டு ஏழுநாட்கள் உப்புநீரில் விளக்கெரியும் அற்புத காட்சியினை முள்ளியவளை காட்டுவிநாயகர் ஆலயத்தில் காணலாம்.

 

காட்டுவிநாயகர் ஆலத்தின் பொங்கல் நிகழ்வு 07 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சிறப்புற நடைபெறும் இவ்வாறு சிறப்பு மிக்க உப்பு நீரியில் விழக்கெரியும் அற்புத காட்சியினை காண நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் மக்கள் வருகைதந்து காட்டு விநாயகர் மற்றும் அம்மனின் அருளினை பெறுவதுடன் பல நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் நேர்த்திக்கடன்களான பாற்செம்பு,பறவைக்காவடி,தூக்குக்காவடி,ஆட்டக்காவடி என காவடிகள் எடுப்பதும் முள்ளியவளை கல்யாண வேலவர் ஆலயத்தில் இருந்து காட்டு விநாயகர் ஆலயம் நோக்கி காவடிகள் எடுத்து தங்கள் நேர்த்திக்கடன்களை நிறைவு செய்வார்கள்
ஆனால் இந்த ஆண்டு நாட்டில் ஏற்பட்டுள்ள சட்ட ஒழுங்கிற்கு அமைவாக காவடிகாரர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.
பலர் தங்கள் நேர்த்திக்கடன்களை பாரம்பரியங்களை தவறாது செய்து வருகின்றமை இங்குள்ள பாரம்பரியங்களில் ஒன்றாக காணப்படுகின்றது.
தொடர்ந்து அடுத்த ஏழாம் நாள்  நாள் திங்கட் கிழமை (08.06.2020) வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் சிறப்பு பொங்கல் நிகழ்வு நடைபெறும்.
கடந்த ஆண்டும் (2019) நாட்டில் தற்போது மக்கள் கூட்டத்திற்கு பொருத்தமில்லா காரணத்தால் மக்கள் பக்குவமாக வழிபாடுகள் மேற்கொள்ளக்கூடிய வகையில் பாதுகாப்பு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதுடன் ஆலயத்திற்கு வரும் பக்த்தர்கள் பாரிய பொதிகளை பைகளை கொண்டுவராமல் தவிர்த்து வழிபாட்டிற்கு வேண்டிய அச்சனை பொருட்களை  ஆலயத்தில் பெற்றுக்கொண்டு வழிபாட்டில் ஈடுபட்டார்கள்,
இந்த ஆண்டு கொரோனாவைரஸ் தொற்று காரணமாக மக்கள் கூடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு அரசாங்கம் அறிவித்துள்ள நிலையிலும் அனுமதிபெற்றவர்கள் ஆலய கிரியைகள் மற்றம் பொங்கல் நிகழ்வுகளில் கலந்து கொள்ளலாம் என மாவட்ட செயலம் மற்றும் பொலீஸ் திணைக்களம் ஊடாக அனுமதி கிடைத்துள்ளது.
கொரோனா வைரஸ் தாக்த்தில் இருந்து மக்கள் தப்பித்துக்கொள்ள தனிமையே வழியென அறிவித்துள்ள நிலையில் வீடுகளில் வாழ்ந்து வரும் மக்களாக நிகழ்வுகளில் கூட்டங்களை தவிர்த்து தங்களையும் பாதுகாத்து தங்கள் சமூகத்தினையும் பாதுகாப்பதன் ஊடாக எதிர்கலத்தினை நல்லதொரு காலமாக மாற்றி அமைக்க வீடுகளில் இருந்தே ஆலய வழிபாடுகளை மேற்கொள்வதே சாலச்சிறந்தது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *