இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் மாரடைப்பு காரணமாக காலமானார்.

பத்தரமுல்லையிலுள்ள அவரின் இல்லத்தில் வைத்து திடீரென சுகவீனமுற்ற அவர், தலங்கம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

55 வயதான அவர் சுகயீனம் காரணமாக தலங்கம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதி தலைவர் மருதபாண்டி ராமேஸ்வரன் தெரிவித்தார்.

1964ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் திகதி பிறந்த அவர் பல முக்கிய பதவிகளையும் பொறுப்புக்களையும் வகித்து வந்தவர்.

மைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவு தொடர்பிலான தகவல் அறிந்தவுடன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் என பலரும் தலங்கம வைத்தியசாலைக்கு வருகை தந்திருந்தனர்.

ஆறுமுகன் தொண்டமான் மலையக இந்திய வம்சாவளி பெருந்தோட்ட  சமூகத்திற்காக அயராது உழைத்த அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் பேரன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *