முல்லைத்தீவு மாவட்டத்தில் காலநிலைக்கு சீரமைவான நீர்பாசன விவசாய திட்டம் ஊடாக உலக வங்கியின் நிதி அனுசரணையில் வழங்கப்பட்ட நிலக்கடலை விதைகள் தரம் குறைவான நிலக்கடலைகள் என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளார்கள்.

இலங்கையில் விவசாய உற்பத்தி பொருட்களின் இறக்குமதியில் ஏற்படும் பிரச்சனைகளை தவிர்ப்பதற்காக முல்லைத்தீவு மாவட்டத்தில் விசேட விவசாய திட்டங்கள் உலக வங்கியின் நிதி உதவியில் மேற்கொள்ளப்படுகின்றன.

கொரோனா வைரஸ் காரணமாக பெருளாதார வல்லாதிக்க நாடுகள் உள்ளிட்ட அனைத்துநாடுகளின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது இதன் காரணமாக இலங்கைக்கும் இறக்குமதியில் பாரிய தாக்கத்தினை ஏற்பட்டுள்ளது.

இலங்கை உணவு உற்பத்தியில் வெளிநாடுகளில் தங்கிஇராமல் சுயமான உற்பத்தியை அதிகரிக்கவேண்டும் என்பதற்காக எதிர்காலத்தில் உணவு பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யும் நோக்கில் அரசு பலதிட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.

நாட்டில் அனைத்து பிரதேசங்களிலும் விவசாய செய்கையினை அதிகரிக்க அரசு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது.

நாட்டில் வாழ்கின்ற மக்களின் உணவு தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்யும் நோக்கில் விவசாய அமைச்சு விவசாயிகளிடம் பல்வேறு உற்பத்திகளை அதிகரிக்கும் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் சிறுபோக உற்பத்தியினை அதிகரிக்கும் நோக்காக உலக வங்கியின் நிதி அனுசரணையுடன் காலநிலைக்கு சீரமைவான நீர்பாசன விவசாய திட்டம் ஊடாக பல விவசாய போதனாசிரியல் ஊடாக உற்பத்தி குழுக்கள் தெரிவு செய்யப்பட்டு இருபதாயிரம் கிலோ நிலக்கடலை விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு வழங்கப்பட்ட நிலக்கடலை விதைகள் பெரும்பாலான விவசாயிகளுக்கு தரம் குறைவான நிலக்கடலையினை வழங்கியுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளார்கள்.

ஒரு விவசாயிக்கு இருபது கிலோ நிலக்கடலை வழங்கப்பட்ட போதும் அதில் ஒரு சுண்டு நிலக்கடலையே நல்ல விதைகள் காணப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளார்கள்.

இவ்வாறு கொள்வனவு செய்யப்பட்ட 17900 கிலோக்கிரமம் நிலக்கடலை விதைகள் தரம் இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

விதைக்காக விற்பனை செய்யப்படும் நிலக்டலை ஒரு கிலோ 300 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது ஏனைய தரம் குறைவான நிலக்கடலைகள் 150 ரூப தொடக்கம் 250 ரூபாவிற்கு விவசாயிகளிடம் பெற்றுக்கொள்ளக்கூடிய நிலை காண்படுகின்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் முத்துஜயன் கட்டு பிரதேசத்தில் 2018 ஆம் ஆண்டு நிலக்கடலை உற்பத்தி அபிவிருத்தி வலையம் என அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட போதும் நிலக்கடலை செய்கையாளர்களுக்கு இவ்வாறான தரம் குறைவான விதையினை வழங்குவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளார்கள்.

விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் நிலக்கடலை செய்கைக்கு அரசு ஊக்கிவிப்பாக விதையினை வழங்கினாலும் தரமான விதையினை இந்த போகத்திற்கு வழங்கவில்லை என்றும் வயல் நிலங்களில் நிலக்கடலை செய்கை பண்ணினால் மாத்திரம் நிலக்கடலை செய்கையாளர்களுக்கு மானிய உரம் அரசால் வழங்கப்படுகின்றது மேட்டு நிலத்தில் நிலக்கடலை செய்கை செய்பவர்களுக்க விதையினை தவிர வேறு எந்த மானியமும் அரசால் வழங்கப்படவில்லை என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளார்கள்.

இது குறித்து முல்லைத்தீவு மாவட்ட விவசாய திணைக்களத்தினை கேட்டபோது இது தொடர்பான விபரங்கள் திரட்டப்பட்டு வருவதாகவும் இவ்வாறு தரம் இல்லாத நிலையில் காணப்படும் நிலக்கடலைகளுக்கு பதிலீடாக நிலக்கடலை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *