சென்னை,

தமிழக மாவட்டங்களில் முறையான நடவடிக்கைகளாக கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. இருந்தபோதிலும் வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்களால் புதிய பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இந்தநிலையில் நேற்று தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 447 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனால் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 674 ஆக அதிகரித்தது. இந்த நிலையில், இன்று மேலும் 434 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 10.108 -ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் இன்று ஒருநாளில் மட்டும் 309பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை  5947-ஆக உயர்ந்துள்ளது.கொரோனாவால் இன்று மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம், கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 71ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து இன்று ஒரே நாளில் 359-பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம், இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 2599- ஆக உயர்ந்துள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *