புவனேஸ்வர்

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 4,213 புதிய கொரோனா பாதிப்புடன் நோயாளிகளின் எண்ணிக்கையில் இந்தியா மிகப்பெரிய ஒற்றை நாள் உயர்வை பதிவு செய்துள்ளது, இது இதுவரை மொத்தம் 67,152 பாதிப்புகளாக உள்ளது என்று மத்திய சுகாதாaர அமைச்சகம் இன்று காலை தெரிவித்துள்ளது.

சமீபத்திய தசாப்தங்களில் உலகம் கண்ட மிகத் தொற்றுநோய்களில் ஒன்றான இந்தியாவில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 2,206 ஆக உயர்ந்துள்ளது; கடந்த 24 மணி நேரத்தில் 97 பேர் இறந்து உள்ளனர்.

மீட்பு விகிதம் இன்று காலை 31.14 சதவீதமாக இருந்தது, கடந்த ஞாயிற்றுக்கிழமை பதிவு செய்யப்பட்ட 26.59 சதவீதத்தை விட குறிப்பிடத்தக்க முன்னேaற்றம் கண்டு உள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 62 ஆயிரத்து 939 ஆகவும், உயிரிழப்பு இரண்டாயிரத்து 109 ஆகவும் அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ஒடிசாவில் தற்போது வரை பதிவான மொத்த வழக்குகளின் எண்ணிக்கை 294 ஆகும், அவற்றில் 63 குணமாகி 2 மரணங்கள் பதிவாகியுள்ளன.கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு இல்லாத 10 மாநிலங்களில் ஒடிசாவும்
ஒன்று ஆகும்.

இந்த நிலையில் குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு ஒடிசாவுக்கு வந்த ரெயில்,பெனகாடியா என்னும் ஊரில் ஒரு பாலத்தின் மீது மெதுவாகச் சென்றபோது அதில் இருந்து இருபதுக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் குதித்து ஓடினர். இதையறிந்த ஊர்மக்கள் 7 பேரைப் பிடித்துக் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

இதையடுத்து அவர்களை அங்குள்ள முகாமில் தனிமையில் வைத்துள்ளனர். கீழே குதித்தவர்களில் 20 பேர் தப்பிச் சென்றுவிட்டனர்.

வெளிமாநிலத் தொழிலாளர்களை 28 நாட்கள் முகாமில் தனிமையில் வைப்பதை ஒடிசா அரசு கட்டாயம் ஆக்கியுள்ள நிலையில் இவர்கள் தப்பியுள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *