சென்னை,
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழக பொருளாதாரம் குறித்து ஆராய்ந்து ஆலோசனைகள் வழங்க , ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் சி.ரங்கராஜன் தலைமையிலான உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. அந்த குழுவில் 24 பேர் இடம்பெற்றிருந்தாலும், அனைவரும் தொழிலதிபர்கள் மற்றும் அதிகாரிகளாவே உள்ளனர்.
 சட்டமன்றத்துக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள்கூட நியமிக்கப்படவில்லை என்பது ஆச்சரியமளிப்பதாக உள்ளது.
 சிறு, குறு தொழில் நிறுவனங்கள், அமைப்பு சாரா தொழில் துறையினர்,  விவசாயிகள், நெசவாளர்கள், மீனவர்கள் என பல துறை பிரதிநிதிகள் இடம்பெற வேண்டும்.
வேலை இழப்பு அதிகரித்து வரும் நிலையில், வரி வருவாயைப் பெருக்கும் நோக்கில் மட்டும் செயல்படாமல்,  மீட்பு – நிவாரணம் – மறுவாழ்வு என்கிற அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *