திருவனந்தபுரம்,
கேரளாவில் மேலும் 16 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “ கேரளாவில் இன்று மேலும் 16 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 576 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 80 ஆக உள்ளது. மாநிலம் முழுவதும் மருத்துவக் கண்காணிப்பில் 42,287 பேர் வீடுகளிலும், 538 பேர் மருத்துவமனைகளிலும் உள்ளனர்” என்று கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், “கொரோனா பாதிப்புகள் தற்போது அதிகரித்து வருகின்றன, இது கவலைக்குரியது. எனவே நாம் இன்னும் எச்சரிக்கையாகவும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும். தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறக்கூடாது, அவர்கள் அவ்வாறு செய்யாமல் பார்த்துக் கொள்ள வேண்டும், தனிமைப்படுத்தலில் இருப்பவர்களைக் கண்காணிக்க, சிறப்பு மோட்டார் சைக்கிள் போலீஸ் படை உருவாக்கப்பட்டுள்ளது” என்றும் தெரிவித்துள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *