தற்காலிக வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் கிளிநொச்சியில் 8 வயது சிறுவன் பலியான சம்பவம் கிளிநொச்சியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெய்த பலத்த மழை காரணமாக கடந்த சில நாட்களாக குறித்த பகுதியில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. தற்காலிக வீட்டின் சுவர் ஈரமடைந்து இதன் காரணமாக இன்று காலை வீழ்ந்துள்ளது. இதன் போதே சிறுவன் உயிரிழந்துள்ளான்.
குறித்த சம்பவம் இன்று காலை 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது தொண்டமான்நகர் பகுதியில் கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்டபிரிவு இடம்பெற்றுள்ளது – தாயார்காலை உணவு உணவு தயாரித்துக்கொண்டிருந்தபோது உயிரிழந்த சிறுவன் உணவருந்திக் கொண்டிருந்துள்ளான்.
திடீரென சுவர் இடிந்து விழுந்ததில் இடிபாட்டுக்குள் சிக்கிய சிறுவன் அயலவர்களின் உதவியுடன் மீட்கப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்து்ச் செல்லப்பட்டுள்ளான். வைthதியசாலையில் சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்துள்ளான்.