முல்லைத்தீவில் கடற்படையினர்களின் உறவினர்கள் 400 பேர் தனிமைப்படுத்தல்!
தெற்கில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான கடற்படையினரின் குடும்பங்கள் உறவினர்கள் என 400 பேர் முல்லைத்தீவு மாவட்டத்தில் தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையத்தில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளார்கள்.
தெற்கினை சேர்ந்தவர்கள் இவர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபிலவு விமானப்படைத்தள தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையத்தில் 250 பேரும், 59 ஆவது படைப்பிரிவின் தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையத்தில் 150 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.
இவர்கள் இன்று மாலை 5.00 மணியளவில் பேருந்துக்கள் மூலம் அழைத்துவரப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.