முல்லைத்தீவு கேப்பாபிலவு விமானப்படைத்தளம் மற்றும் படையினரின் தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையத்தில் கடற்படையினை சேர்ந்த 400 பேர்  கடந்த 18 ஆம் திகதி மாலை 17 பேருந்துக்களில் கொண்டுவந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்

இவர்களில் 99 பேரின் மாதிரிகள் (20) ஆம் திகதி பரிசோதனைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டு அனுராதபுரம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது அவர்களில் இரு கடற்படையினருக்கு கொரோனா தொற்ற இருப்பது இனம் காணப்பட்டுள்ளது.

இன்னிலையில் இவர்கள் இருவரும் வெலிகந்த கொரோனா தடுப்பு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் எஸ்.சுகந்தன் தெரிவித்துள்ளார். அங்குள்ள ஏனையவர்களின் மாதிரிகள் விரைவில் பரிசோதனைக்கா எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *