புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.   நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது, 63 ஆயிரத்தினை நெருங்கியுள்ளது. கொரோனா தடுப்பு பணிகளில் முன்கள பணியாளர்களாக இருக்கும் மருத்துவர்கள், சுகாதத்துறை ஊழியர்கள், பாதுகாப்புப் படையினர், தூய்மை பணியாளர்கள் ஆகியோரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
கிட்டதட்ட அனைத்து துறைசார்ந்த நபர்களையும் கொரோனா தாக்கியுள்ளது. இதன் தொடர்ச்சியாக தற்போது விமானிகளுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் ஐந்து விமானிகள், தங்களது கடைசி பயணத்தின் 20 நாட்களுக்குப் பிறகு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளனர்.
ஐந்து விமானிகள், ஒரு பொறியியலாளர், மற்றும் எர் இந்தியா நிறுவனத்தின் தொழில்நுட்ப வல்லுநர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக விமான நிறுவன வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்ட ஐந்து விமானிகளுக்கும் எவ்வித அறிகுறியும் தென்படவில்லை. இந்நிலையில் ஐவரும் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தலில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட விமானிகள் போயிங் 787 ட்ரீம்லைனர் விமானத்தை இயக்கிவந்திருந்தனர். கடைசியாக ஏப்ரல் 20 அன்று விமானத்தை இயக்கியிருந்தனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *