எம்மை பற்றி

வணக்கம் அன்புத் தமிழர்களே…

ஊடகமானது மனித உரிமைகள், ஜனநாயகம் மற்றும் நல்லாட்சி என்பவற்றை மேம்படுத்துவதற்கும் அவற்றை பாதுகாப்பதற்கும் பாதுகாக்கும் பொருட்டும், அனைத்து சமூகங்களினதும் கௌரவம், நீதி மற்றும் வாழ்வு ஆகியவற்றை பாதிக்கின்ற சகல வகையான மனித உரிமை மீறல்கள்பற்றிய தகவல்களை அறிக்கையிடும் வல்லமையை கொண்டிருப்பது மாத்திரமன்றி, விடயங்கள், நிகழ்வுகள் மற்றும் நடவடிக்கைகள் பற்றி புரிதலையும், பொதுமக்கள் மத்தியில் அறிவூட்டலையும் ஏற்படுத்துவதுடன் உலகின் சகல பாகங்களிலும் உள்ள மக்களையும் இணைக்கின்றது.

அதுமாத்திரமன்றி, பொதுமக்கள் மத்தியில் அவர்களது உரிமைகள் பற்றிய விழிப்புணர்வை அதிகரிப்பதற்கும் அறிவூட்டலை மேற்கொள்வதற்கும், அத்துடன் சகல மனித உரிமை மீறல்களையும் அறிக்கையிடுவதற்கும் கண்காணிப்பதற்கும் புலனாய்வு செய்வதற்குமான தார்மீக கடமையினையும் கொண்டிருக்கிறது.