சென்னை,
கொரோனா  பரவலை தடுக்க மே 3-ம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஷாப்பிங் மால்கள், ஜிம்கள் மற்றும் பொழுதுபோக்கு இடங்களுடன், தியேட்டர்களும் நாடு முழுவதும் மூடப்பட்டுள்ளன. படப்பிடிப்புகளும் ரத்தான நிலையில், பிரபலங்கள் தங்களின் நேரத்தைச் சமைப்பது, உடற்பயிற்சி செய்வது, பாடுவது, ஆடுவது என தங்களுக்கு பிடித்த செயல்களை செய்வதன் மூலம் உபயோகமாகச் செலவழிக்கிறார்கள்.
அதனை தங்களது சமூக வலைதள பக்கத்திலும் பதிவேற்றம் செய்து தனது ரசிகர்களுடன் தொடர்பிலேயே இருந்து வருகின்றனர்.
இந்தநிலையில், அபியும் நானும் மற்றும் உன்னைப்போல் ஒருவன் போன்ற திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் கணேஷ் வெங்கட்ராம் . இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற
தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவர் கமலஹாசன், அமிதாப் பச்சன், மோகன்லால், போன்ற முன்னணி நடிகர்களுடன் பணியாற்றியுள்ளார். இவருக்கும் நிஷா கிருஷ்ணன் என்ற நடிகையுடன் 22 நவம்பர் 2015 அன்று திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் கணேஷ் வெங்கட்ராம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அவரது மகளுடன் குஷியாக இந்தி பாடலுக்கு ஆடும் வீடியோவை பகிர்ந்துள்ள அவர் , என் குட்டி இளவரசியுடன் மெதுவாக ஒரு நடனம், அதுவும் எனக்கு மிகவும் பிடித்த ரெட்ரோ பாலிவுட் பாடல்களுடன் என அவர் பதிவிட்டுள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *