மும்பை,
உலகம் முழுவதும் இன்று அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. பல்வேறு திரையுலக பிரபலங்கள், நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் தங்களின் அம்மாவிற்கும் உலகம் முழுக்க இருக்கும் பெண்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
முக்கியமாக இந்திய கிரிக்கெட் அணியை சேர்ந்த கேப்டன் கோலி உள்ளிட்ட வீரர்கள் தங்களின் அம்மாவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் அன்னையர் தினத்தை முன்னிட்டு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் தெண்டுல்கர் டுவிட்டர் பதிவில்,
 அம்மா, நீங்கள் எப்போது எனக்கு ஒரு ஏஏஐ (AAI) என்று நான் குறிப்பிடுவேன். ஏனென்றால் நீங்கள் எனக்கு எப்போதும் சிறப்பானவர் அதோடு ஈடுஇணையற்றவர் (Always Amazing & Irreplaceable.) எனக்காக நீங்கள் செய்த அனைத்திற்கும் நன்றி அம்மா. வணங்குகிறேன். அன்னையர் தின வாழ்த்துகள் அம்மா, என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை வெளியே வராத தன்னுடைய அம்மாவுடன் இருக்கும் குழந்தை புகைப்படம் ஒன்றை பகிர்ந்து உள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *