கொழும்பு //– பொரளையில் உள்ள சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் இதுவரை /20/ சிறுவர்கள் மற்றும் /12 /தாய்மார்கள் //கொரோனா வைரஸ்// தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் ஜி.விஜேசூரியா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, /வைத்தியசாலையில் பணியாற்றும் மருத்துவர் ஒருவருக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவா் கூறினார்.// எனினும் அந்த மருத்துவர் வைத்தியசாலையில் தொற்றுக்குள்ளாகவில்லை எனவும் பணிப்பாளர் குறிப்பிட்டார்./

தொற்றுக்குள்ளாகி //உறுதி செய்யப்பட்ட மருத்துவருடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிய இரண்டு மருத்துவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பணிப்பாளர் //ஜி.விஜேசூரியா கூறினார்/.

இந்நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வருவதற்கு அஞ்சத் தேவையில்லை. மருத்துவ சேவைகள் எந்தவித /இடையூறும் இல்லாமல் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் அவர் உறுதியளித்தார்.

சிறுவர்கள் நோயால் பாதிக்கப்பட்டால் அவர்களின் நோய் நிலை /மோசமடைவதற்கு முன்னர் வைத்தியசாலைகளை/ அணுகுமாறும்/ பணிப்பாளர் ஜி.விஜேசூரியா பொதுமக்களைக் கோரியுள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *