புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதனை தடுக்கும் நடவடிக்கைகளில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரமுடன் ஈடுபட்டு வருகின்றன. எனினும், பொதுமக்கள் அளிக்கும் ஒத்துழைப்புக்கு ஏற்ப கொரோனா பரவல் கட்டுக்குள் வரும் என்று அரசு தெரிவித்து வருகிறது.
நாட்டில் கொரோனா பாதிப்புக்கு, பலி எண்ணிக்கை 2,109 ஆக நேற்று உயர்வடைந்தது. 19 ஆயிரத்து 358 பேர் குணமடைந்தும், 41 ஆயிரத்து 472 பேர் தொடர் சிகிச்சையிலும் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டது. இதனால் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 62 ஆயிரத்து 939 ஆக உயர்வடைந்து இருந்தது.
இந்த நிலையில், மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 97 பேர் பலியான நிலையில், பலி எண்ணிக்கை 2,109ல் இருந்து 2,206 ஆக உயர்வடைந்து உள்ளது. 20 ஆயிரத்து 917 பேர் குணமடைந்தும், 44 ஆயிரத்து 29 பேர் தொடர் சிகிச்சையிலும் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 62 ஆயிரத்து 939ல் இருந்து 67 ஆயிரத்து 152 ஆக உயர்வடைந்து உள்ளது.