அடக்குமுறையின் உச்சத்தின் வெளிபாடாக முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்! முள்ளிவாய்க்கால் போரின் உயிரிழந்த மக்களை நினைவிற்கொள்ளும் 11 ஆம் ஆண்டின் நினைவு நிகழ்வு எதிர்வரும் 18 ஆம் திகதி திங்கட்கிழமை மக்களால் நினைவிற்கொள்ளப்படவுள்ள நிலையில் அடக்குமுறையின் உச்சத்தின் வெளிப்பாடாக அமைதியாக முள்ளிவாய்க்கால் நினைவிடம் காட்சி கொடுக்கின்றது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக வடக்கில் தமிழ்மக்களின் பிரதிநிதிகள் என்று சொல்லக்கூடியவர்கள் மாகாணசபை என்பன ஆட்சியில் இருந்தவேளை முண்டியடித்து நீயா நானா என ஆர்வம் காட்டிய பலர் இல்லாமல் மே-18 நினைவு நாள் நெருங்கிக்கொண்டிருக்கின்றது. கடந்த ஆண்டுகளில் ஒரு மாதங்களுக்கு முன்னரே கூட்டங்கள் சிரமதான பணிகள், கொடிகள் என நினைவு நிகழ்வுக்கான அலங்காரங்கள் என விறுவிறுப்பாக நடைபெறும் இடமாக முள்ளிவாய்க்கால் மண் காணப்பட்டது அன்று பல அரசியல் வாதிகள் பதவிகளோடும் அதிகாரத்தோடும் இருந்தார்கள் இன்று அனைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும்,மாகணசபை உறுப்பினர்களாகவும்,பதவிகள் அதிகாரங்கள் அற்ற நிலையில் இனிவரப்போகும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றவர்களாகவே காணப்படுகின்றார்கள். கடந்த ஆண்டு நாட்டில் குண்டுவெடித்தது அதன் பிரதிபலிக்கா மக்களின் வருகை குறைவாக இருந்த போதும் போரில் உயிரிழந்தவர்களை நினைவிற்கொண்டார்கள். இன்று கொரோனா வைரஸ் நாட்டில் மட்டுமல்ல உல நாடுகளிலும் காணப்படுவதால் முள்ளிவாய்க்கால் நினைவில் உணர்வுடனேயே காணப்படுகின்றார்கள் புலம்பெயர்ந்த தமிழ்மக்களும். 16.05.2020 நாள் என்பது முள்ளிவாய்க்கால் மண்ணில் பலரின் வருகை மக்களின் சிரமதான பணிகள்,என களைகட்டும் செயற்பாடுகள் காணப்படும் ஆனால் இன்று மாறுபட்ட நிலையில் புலனாய்வாளர்களின் கண்காணிப்பில் முள்ளிவாய்க்கால் மண் காணப்படுகின்றது. முள்ளிவாய்க்கால் பகுதியில் வீதிச்சோதனை மற்றும் கிராமங்கள் வீதிகள் எங்கும் சிவில் உடை தரித்த புலனாய்வாளர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றார்கள். இவ்வாறான நிலையிலும் எதிர்வரும் 18 ஆம் திகதி காலை முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிரிழந்த மக்களுக்கான நினைவு நிகழ்வு சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தி போரில் உயிரிழந்த மக்களை நினைவிற்கொள்ளவுள்ளார்கள் இரவு வேளை மக்கள் வீடுகளில் சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தவுள்ளார்கள் எவராலும் தடைசெய்யமுடிhத மறக்கமுடியாத ஆறாத வடுவாக மக்களின் மனங்களில் பதிந்திருக்கும் இன அழிப்பின் உச்ச இடம் முள்ளிவாய்க்கால் என்பதை ஆக்கிரமிப்பாளர்களும் அழிப்பினை மேற்கொண்டவர்களும் உணர்ந்து கொள்ளும் ஆண்டாக 11 ஆம் ஆண்டு நினைவு நினைவேந்தல்கள் அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Byadmin

Nov 2, 2020
சென்னை,
நாடு முழுவதும் 3ஆவது முறையாக கொரோனா ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இது இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில் 4ஆவது முறையாக புதிய விதிகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என கடந்த சில நாட்களுக்கு முன்னர் நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
அதற்கான விதிமுறைகள் 18-ஆம் தேதிக்குள் அறிவிக்கப்படும் என்றும் அறிவித்தார். இந்த நிலையில் தமிழகத்தில் வருகிற மே 31 ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் பழனிசாமி  அறிவித்துள்ளார். அதில், 12 மாவட்டங்களில் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள் தொடரும் என்று அறிவிக்கபட்டுள்ளது.
முதலமைச்சர் பழனிசாமி  வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
* சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய 12 மாவட்டங்களில் தளர்வுகள் ஏதும் இல்லை. ஏற்கெனவே நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள் தொடரும்.மதுரை உள்ளிட்ட ஏனைய 25 மாவட்டங்களில் புதிய தளர்வுகள் அளிக்கப்படுகின்றன.
* பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் செயல்பட தடை நீடிப்பு.
* வழிபாட்டு தளங்கள், மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை நீடிப்பு.
* திருவண்ணாமலை, அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் எந்த தளர்வும் இல்லை.
* நீலகிரி, கொடைக்கானல் மற்றும் ஏற்காடு சுற்றுலாத் தலத்திற்கு வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்படுகிறது.
* தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போது உள்ள நடைமுறைகளின்படி, எந்தவிதமான தளர்வுகளும் இன்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும்.
* பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர பிற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பணிகளுக்கு மட்டும் அனுமதி தொடரும்.
* பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகள் தவிர தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர, பிற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பணிகளுக்கு அனுமதி தொடரும்.
* நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் எந்த தளர்வும் இல்லை. சென்னையில் நோய்க் கட்டுப்பாட்டு பகுதி தவிர பிற இடங்களில் அனுமதிக்கப்பட்ட பணி தொடரும்.
* சமய சமுதாய அரசியல், கல்வி, கலாச்சார விழாக்கள் நடைபெறாது.
*விமானம், ரெயில், பேருந்து இயங்காது – மாநிலங்கள் இடையே மற்றும் சென்னையில் இருந்து பிற பகுதிகளுக்கு ரெயில் போக்குவரத்து இல்லை.
*ஆட்டோ, டாக்சி, மெட்ரோ- மின்சார ரெயில் போக்குவரத்து இல்லை.
*அனுமதிக்கப்பட்ட, அத்தியாவசிய பணிகளுக்கும் மட்டுமே போக்குவரத்தை பயன்படுத்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *