அடக்குமுறையின் உச்சத்தின் வெளிபாடாக முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்!
முள்ளிவாய்க்கால் போரின் உயிரிழந்த மக்களை நினைவிற்கொள்ளும் 11 ஆம் ஆண்டின் நினைவு நிகழ்வு எதிர்வரும் 18 ஆம் திகதி திங்கட்கிழமை மக்களால் நினைவிற்கொள்ளப்படவுள்ள நிலையில் அடக்குமுறையின் உச்சத்தின் வெளிப்பாடாக அமைதியாக முள்ளிவாய்க்கால் நினைவிடம் காட்சி கொடுக்கின்றது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக  வடக்கில் தமிழ்மக்களின் பிரதிநிதிகள் என்று சொல்லக்கூடியவர்கள் மாகாணசபை என்பன ஆட்சியில் இருந்தவேளை முண்டியடித்து நீயா நானா என ஆர்வம் காட்டிய பலர் இல்லாமல் மே-18 நினைவு நாள் நெருங்கிக்கொண்டிருக்கின்றது.
கடந்த ஆண்டுகளில் ஒரு மாதங்களுக்கு முன்னரே கூட்டங்கள் சிரமதான பணிகள், கொடிகள் என நினைவு நிகழ்வுக்கான அலங்காரங்கள் என விறுவிறுப்பாக நடைபெறும் இடமாக முள்ளிவாய்க்கால் மண் காணப்பட்டது
 அன்று பல அரசியல் வாதிகள் பதவிகளோடும் அதிகாரத்தோடும் இருந்தார்கள் இன்று அனைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும்,மாகணசபை உறுப்பினர்களாகவும்,பதவிகள் அதிகாரங்கள் அற்ற நிலையில் இனிவரப்போகும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றவர்களாகவே காணப்படுகின்றார்கள்.
கடந்த ஆண்டு நாட்டில் குண்டுவெடித்தது அதன் பிரதிபலிக்கா மக்களின் வருகை குறைவாக இருந்த போதும் போரில் உயிரிழந்தவர்களை நினைவிற்கொண்டார்கள்.
இன்று கொரோனா வைரஸ் நாட்டில் மட்டுமல்ல உல நாடுகளிலும் காணப்படுவதால் முள்ளிவாய்க்கால் நினைவில் உணர்வுடனேயே காணப்படுகின்றார்கள் புலம்பெயர்ந்த தமிழ்மக்களும்.
16.05.2020 நாள் என்பது முள்ளிவாய்க்கால் மண்ணில் பலரின் வருகை மக்களின் சிரமதான பணிகள்,என களைகட்டும் செயற்பாடுகள் காணப்படும் ஆனால் இன்று மாறுபட்ட நிலையில் புலனாய்வாளர்களின் கண்காணிப்பில் முள்ளிவாய்க்கால் மண் காணப்படுகின்றது.
முள்ளிவாய்க்கால் பகுதியில் வீதிச்சோதனை மற்றும் கிராமங்கள் வீதிகள் எங்கும் சிவில் உடை தரித்த புலனாய்வாளர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.
இவ்வாறான நிலையிலும் எதிர்வரும் 18 ஆம் திகதி காலை முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிரிழந்த மக்களுக்கான நினைவு நிகழ்வு சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தி போரில் உயிரிழந்த மக்களை நினைவிற்கொள்ளவுள்ளார்கள் இரவு வேளை மக்கள் வீடுகளில் சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தவுள்ளார்கள் எவராலும் தடைசெய்யமுடிhத மறக்கமுடியாத ஆறாத வடுவாக மக்களின் மனங்களில் பதிந்திருக்கும் இன அழிப்பின் உச்ச இடம் முள்ளிவாய்க்கால் என்பதை ஆக்கிரமிப்பாளர்களும் அழிப்பினை மேற்கொண்டவர்களும் உணர்ந்து கொள்ளும் ஆண்டாக 11 ஆம் ஆண்டு நினைவு நினைவேந்தல்கள் அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *